கோவை -ஜூன்:02
இந்திய தேசிய காங்கிரஸ் 51 வது டிவிஷன் சௌரிபாளையம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கோவை சவுரிபாளையம் சாலையில் அமைந்துள்ள 1688 என்கொண்ட டாஸ்மார் மதுக்கடை நீண்ட காலமாக இயங்கி வருகிறது. விதிகளுக்கு புறம்பாகவும் மக்கள் குடியிருப்பு மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் உள்ள மது கடைகள் அகற்றப்படும் என்ற தமிழக முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பை தொடர்ந்து இக்கடை உடனடியாக மூடப்படும் என அப்பகுதி பெண்கள்,பள்ளி குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் எதிர்பார்ப்பாக காத்திருந்தனர்.
ஆனால் இன்றுவரை இந்த கடை மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆகவே இந்த மதுக்கடையை அகற்றி இடமாற்றம் செய்து தர வேண்டும் என்று சவுரிபாளையம் பொதுமக்கள் மற்றும் எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று மனு அளித்தனர்.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு