February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அறந்தாங்கி புதிய பேருந்து நிலைய அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வாரச்சந்தை வியாபாரிகள் கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்


பேப்பர் செய்தி

அறந்தாங்கி நவம்பர் 8
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் புதிய பேருந்து நிலைய அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வாரச்சந்தை வியாபாரிகள் கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்

அறந்தாங்கியில் இயங்கி வரும் வார சந்தையின் ஒரு பகுதியில் தற்போது புதிய பேருந்து நிலையம் அமைவது குறித்த அரசாணையை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்

சுமார் 7.30 ஏக்கர் பரப்பளவு கொன்ட அறந்தாங்கி வாரச்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று சந்தை நடைபெறும்

சந்தை நடைபெறும் தினத்தில் அறந்தாங்கி மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல வியாபாரிகள் இச்சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனர்

தற்போது அரசு வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் ஒரு பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாரச்சந்தை வியாபாரிகள் இன்று அறந்தாங்கியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருந்தனர்..

இந்நிலையில் இப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால்..
போராட்டத்தில் ஈடுபட இருந்த வாரச்சந்தை வியாபாரிகள் சந்தை பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று அறந்தாங்கி அம்மா உணவகம் முன்பு புதிய பேருந்து நிலையம் வார சந்தைக்குள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

அறந்தாங்கி பழனிவேல்

Facebook
YouTube
Instagram
WhatsApp