June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் இறுதி கட்ட பிரச்சாரம்..

சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத் தீவிர பிரச்சாரம்..

ஈரோடு. ஏப்ரல். 22

மொடக்குறிச்சி தொகுதியில் நேற்று தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நாளை ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நான்காம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகாவிற்கு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி ஒதுக்க ப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் மதிமுக வேட்பாளராக சா. செந்தில்நாதன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் மொடக்குறிச்சி தொகுதி முழுவதும் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டார்

இதனை தொடர்ந்து சிவகிரி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில், பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், அவரது கணவரும் சிவகிரி பேரூர் திமுக செயலாளர் ஆன கோபிநாத் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டணி கட்சி தலைவர்கள் சிவகிரி பேரூராட்சி பகுதியில் வேட்பாளர் செந்தில்நாதன் அழைத்துச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.