June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.. ஆனைக்கல் பாளையம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.. ஈரோடு. ஏப்ரல். 19 ஈரோடு மாவட்டத்திற்கு எண்ணற்ற பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. என்று அணைக்கள்பாளையத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தமிழக சட்டமன்ற பொது தேர்தல் இம்மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்த மாதம் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து உதயநிதி ஸ்டாலின் பரப்பரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.. கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து மக்களை சந்தித்து வருகிறேன். இன்று நம் வணக்கம் பெரியார் மண்ணில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி.. நம்முடைய திராவிடம் மாடல் 2.0 ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்கள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையோடு சொந்த காலை நிற்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் பெண்களுக்கான நிதி உதவி திட்டங்களை நிறைவு செய்து வருகிறார். மாணவ மாணவிகளும் தங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் அவர்களுக்கும் பல்வேறு நிதி உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் நம்முடைய முதல்வர் அவர்கள். இந்த ஈரோடு மாவட்டத்தில் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து நம்முடைய முதல்வர் அவர்கள் நிறைவேற்றி உள்ளார். நாம் நம்முடைய வாழ்க்கையில் முரட்டு பக்தர்களை பார்த்து இருக்கின்றோம் ஆனால் முரட்டு அடிமையை பார்க்க வேண்டிய கால கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த முரட்டு அடிமை யார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அதனை நான் சொன்னால் என் மீது கோபப்படுகிறார். அவருக்கு உண்மை சொன்னால் எப்பொழுதும் சொல்பவர்கள் மீது கோபம் வருவது வழக்கம். துரோகத்தின் மொத்த உருவமாகவும் அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் எடப்பாடி பழனிசாமி இருக்கின்றார். சங்கிகளின் கூட்டமான பாஜகவை தமிழகத்தில் காலூன்ற எடப்பாடி பழனிச்சாமி துணைகிறார். இன்றைக்கு ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு சீரமைப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இது நமக்கு கிடைத்த பெரிய வெற்றி. நம்முடைய தலைவர் அவர்களுக்கு கிடைத்த வெற்றி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த சட்டம் உன் வடிவில் கொண்டு வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் நம்முடைய தலைவர் அவர்கள். இன்று அதில் நாம் வெற்றி பெற்று இந்தியாவிற்கே ஒரு தலை சிறந்த வழியாக திமுக திகழ்கிறது. அடைகின்ற கடும் வெயிலிலும் ஆர்வத்தோடு பொறுமை காத்து என்னுடைய பேச்சை கேட்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இங்கு உள்ள எட்டு தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவது நிச்சயம். இங்கு ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் முத்துசாமி அவர்கள் ஒரு மூத்த அரசியல்வாதி. அது மட்டுமல்லாமல் உங்கள் ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் அவர்களிடம் பேசிக் கொண்டு வந்தவர். ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நம் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் ஒரு சிறந்த பண்பாளர். மெத்தப் படித்தவர் அவருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தொடர்ந்து மொடக்குறிச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் செந்தில் நாதன் சிறந்த பண்பாளர் பட்டம்படித்தவர். அண்ணன் வைகோ அவர்களின் அன்பை பெற்றவர் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இங்கே நான் அறிமுகப்படுத்தியுள்ள மூன்று வேட்பாளர்களின் வெற்றி பெற செய்வது உங்களின் கடமையாகும். உங்கள் அனைவரையும் அன்போடு மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறேன் அடுத்து நம்முடைய தலைவர் தலைமையில் அமையும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தால் இன்னும் பல எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்படும். இவ்வாறு ஆனைக்கல் பாளையத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். பிரச்சார கூட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வரும்பொழுது நேரம் பிற்பகல் 12 மணி ஆகிவிட்டது. கடும் வெயிலிலும் பொதுமக்கள், தொண்டர்கள் அவரின் பேச்சைக் கேட்க திரளாக வந்திருந்தனர். துணைமுதல் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.