தேர்தல் பரப்புரையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ரா கதிரவன் வாக்குறுதி
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை வையம்பட்டி மருங்காபுரி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அனல் பறக்கும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ரா கதிரவன் இன்று மணப்பாறை நகராட்சி 27 வார்டுகளிலும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்
எடத்தெரு காந்திநகர் பாரதியார் நகர் மயில் வளைவு மஸ்தான் தெரு மணப்பாறைப்பட்டி இந்திரா நகர் ராஜூ நகர் மதுரை ரோடு சிதம்பரத்தான் பட்டி கல்லாத்துப்பட்டி காட்டுப்பட்டி கோவில்பட்டி ரோடு உள்ளிட்ட 27 வார்டுகளிலும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ரா கதிரவன் காந்திநகர் பகுதியில் பிரச்சாரத்தில் பேசியதாவது
2026 இந்த தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு தற்போது தயாராகிவிட்டது மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் ஒரு இளைஞனாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக தலைவர் விஜய் அவர்களின் ஆசி பெற்று உங்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன் காந்திநகர் பகுதியில் பல்வேறு மக்கள் குடிதண்ணீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர் குடியிருக்கும் ஒரு சில பகுதிகளுக்கு இன்று வரை அடிமனை பட்டா வழங்கவில்லை இதே போன்று தெரு விளக்குகள் கழிவுநீர் கால்வாய் சாலை வசதிகள் எதுவும் செயல்படாமல் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளீர்கள் நிச்சயம் இந்த முறை எனக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் மணப்பாறை நகரப் பகுதியை செழுமை நிறைந்த பகுதியாக அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்த பகுதியாக மாற்றி காட்டுவேன் என்று வாக்காளர்கள் மத்தியில் விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்



தேர்தல் பரப்புரையில் நகரச் செயலாளர்கள் திருப்பதி அழகர் வழக்கறிஞர் விஜய் பாண்டியன் தவெக நிர்வாகிகள் அம்ஜத் கான் தினேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
மணப்பாறை நகரப் பகுதி முழுவதும் பெண்கள் ஆரவாரத்துடன் விசில் அடித்தும் பூரண கும்பம் மரியாதையுடன் பட்டாசு வெடித்தும் வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு தந்தனர்.




More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!