ஓம்சக்தி சேகர் அவர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி
அன்பிற்கினிய புதுவை மக்களுக்கும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
புதிய ஆண்டான இது, மக்களின் மனங்களிலும் எண்ணங்களிலும் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் விதைக்கும் இனிய தொடக்கமாக அமையட்டும். நாம் அனைவரும் ஒருமித்த மனதுடன் செயல்பட்டு, எதிர்கொள்ளும் தடைகளை தகர்த்து, புதிய சாதனைகளை உருவாக்கி, வளமிக்க புதுச்சேரியை கட்டியெழுப்ப உறுதியெடுப்போம்.
இந்த தமிழ்ப் புத்தாண்டு, புதுவை மக்களுக்கு தொடர்ந்த வளர்ச்சி, குறையாத மகிழ்ச்சி, முழுமையான நலம் மற்றும் நாளும் மலரும் முன்னேற்றத்தை அளிக்கும் சிறப்பான ஆண்டாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
மீண்டும் ஒருமுறை, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான நெல்லிதோப்பு தொகுதி மக்களுக்கும் என் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு