ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு..
ஈரோடு. ஏப்ரல். 011
ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் சு. முத்துசாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர்.
வருகின்ற 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நடைபெற. தொடர்ந்து மே 04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் தீவிரமாக தேர்தல் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் சூடு பிடித்துள்ளது.
மேலும் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சு. முத்துசாமி திமுக மட்டும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் புடை சூழ தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் கொல்லம்பாளையம் வார்டு எண் 55 ல் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு அங்கிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு வழங்கினர்.
அவர்கள் மத்தியில் பேசிய திமுக வேட்பாளர் அமைச்சர் சு. முத்துசாமி தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சார நிகழ்ச்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு