June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மரத்தடியில் அமர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்த மத்திய சட்ட அமைச்சர்..

மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்..

ஈரோடு
ஏப்ரல். 10

மொடக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற பாஜக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய சட்ட அமைச்சர் மரத்தடியில் அமர்ந்து வாக்கு சேகரித்தார்.

தமிழக சட்டமன்ற பொது தேர்தல் 2026, வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே மாதம் 04 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு பாஜக வேட்பாளராக எஸ். கிருத்திகா அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்களுக்கு பிறகு அவர் தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியை சேர்ந்த பாஜக, அதிமுக, பாமக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அவருக்கு தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வா அவர்கள் பாஜக வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அவல்பூந்துறை மற்றும் பச்சப்பாளி பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது மத்திய அமைச்சர் அங்கு இருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து, அப்பகுதி பொதுமக்களிடம் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம், பாஜக தெற்கு மாவட்ட தலைவர் எஸ் எம் செந்தில், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.