திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க கூட்டணி கட்சி (மனிதநேய மக்கள் கட்சி) வேட்பாளர் அப்துல் சமதுவை ஆதரித்து மருங்காபுரி வடக்கு ஒன்றியம் ஊத்துக்குளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திராவிட மாடல் அரசு மீண்டும் மலர்ந்திட திட்டங்கள் தொடர்ந்திட தி.மு.க வுக்கு வாக்களித்திட வேண்டும் என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரச்சாரக்களத்தில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தி இருக்கின்றோம் என்று சொல்லி செய்த திட்டங்களால் மக்களிடம் உரிமையோடு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறோம். இந்த தேர்தல் முதல்வர் சொன்னதுபோல் டெல்லி அணிக்கும் – தமிழ்நாடு அணிக்குமான தேர்தல். இதுபோன்று டெல்லி அணிக்கும் – தமிழ்நாடு அணிக்கும் போட்டி வரும் போதெல்லாம் தமிழ்நாடு அணிதான் வென்றிருக்கின்றது, அதே போல் இந்த முறையும் தமிழ்நாடு அணிதான் வெல்லும் என்று கூறினார்.
இதில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு வேட்பாளருடன் நடந்து சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருடன் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.