June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பி.என். ரோட்டில் மேம்பாலம்அ.தி.மு.கவேட்பாளர் உறுதி!!

பெருமாநல்லுார்,ஏப்.09-

திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் தலைமை அலுவலகம், ஈட்டிவீரம்பாளை யம் ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடைபெற்றது.

அலுவலகத்தை திறந்து வைத்து வேட்பாளர் ஆனந்தன் பேசியதாவது:

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் திருப்பூர் மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்று உள்ளது.
எம்.எல்.ஏ. விஜயகுமார் முயற்சி எடுத்து தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்டது.

திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் ஆனந்தன் திறந்து வைத்தார்.

பி.என். ரோட்டில் போக்குவரத்து நெருக்கடியை போக்கும் வகையில் பெருமாநல்லுாரில் இருந்து,
புஷ்பா ரவுண்டானா வரை மேம் பாலம் அமைக்க முழு
முயற்சி எடுப்பேன்.

அதேபோல், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெருமாநல் லுாரில் அமைத்து, தனி தாலுகாவாக அறிவிக்க முயற்சி மேற்கொள்வேன்.

இந்த பகுதியின் மக்களின் கோரிக்கைகளை ஏற்று வருங்காலத்தில் வடக்கு தொகுதிக்கு தேவையான அனைத்து தேவைகளை யும் செய்து கொடுக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு பேசினார்.

அலுவலகம் திறப்பு விழாவில்.
விழாவில்,எம்.எல்.ஏ. விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதன்பின்,
வேட்பாளர் ஆனந்தன், ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி பகுதியில் பிரச்சாரம்
மேற்கொண்டார்.