April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சு. முத்துசாமி தீவிர தேர்தல் பிரச்சாரம்..

அனைத்து தரப்பு மக்களிடமும் பெருகி வரும் ஆதரவு..

ஈரோடு. ஏப்ரல். 07

ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் அமைச்சர் சு. சாமி தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தொகுதி முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் இம்மாதம் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. அடுத்த மாதம் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியும் கூட்டணி அமைத்து தங்களின் வேட்பாளர்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், ஈரோடு மேற்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் சு. முத்துசாமி போட்டியிருக்கிறார்.

இவர் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொகுதி முழுவதும் செய்தி வருகிறார்.

இவருக்கு தொகுதியில் உள்ள பலதரப்பட்ட மக்களும் பல்வேறு அமைப்புகளும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று திமுக வேட்பாளர் அமைச்சர் முத்துசாமி சூரம்பட்டி பகுதியில் உள்ள 32 வது வார்டு பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது அவருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவிக்கும், மலர் தோவியம் அன்போடு வரவேற்றனர்.

அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் அமைப்புகள் அவரை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

பிரச்சாரத்தின் போது வேட்பாளர் சு. முத்துசாமியுடன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp