புதுச்சேரி:
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒரு சுவாரசியமான நிகழ்வாக, முதலமைச்சரின் இல்லத்திற்கே சென்று அவர் ஆதரவு திரட்டினார்.
இந்திரா நகர் தொகுதியில்தான் முதலமைச்சரின் இல்லம் அமைந்துள்ளது. இதனால், தொகுதிப் பகுதிகளில் வாக்கு சேகரித்து வந்த வேட்பாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், நேரடியாக முதலமைச்சரை சந்தித்து தனக்கு ‘ஜக்கு’ சின்னத்தில் வாக்களிக்குமாறு கோரினார்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் உடனிருந்தனர்.
முதலமைச்சரின் இல்லத்திற்கே வேட்பாளர் சென்று வாக்கு கேட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும், அரசியல் வட்டாரத்தில் சுவாரசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி முழுவதும் தொண்டர்களின் உற்சாக முழக்கங்களுடன் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..