April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மேற்கு தொகுதி திமுக தேர்தல் பிரச்சாரம்..

வேட்பாளர் அமைச்சர் சு. முத்துசாமிக்கு ஆதரவு தெரிவித்த மாற்றுத் திறனாளி பெண்மணி..

ஈரோடு. ஏப்ரல் 04

ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் முத்துசாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஈரோடு மாவட்டம் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் சு. முத்துசாமி காலை 7 மணி முதல் இரவு வரை தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து தொகுதி முழுவதும் பொதுமக்களும் வாக்காளர்களும் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு வழங்கி தங்களின் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட, நெசவாளர் காலனி பகுதியில் அவர் கட்சியினருடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு அவருக்கு திரளான பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அங்கு இருந்த ஒரு மாற்று திறனாளி பெண்மணி தனது மூன்று சக்கர வண்டியில் அமர்ந்தபடி திமுக வேட்பாளர் அமைச்சர் முத்துசாமியை அருகில் அழைத்து, அன்போடு வாழ்த்து கூறி தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்த நிகழ்வு அப்பகுதியில் உள்ள மக்களிடையே ஒரு நெகிழ்சியை ஏற்படுத்தியது.

Facebook
YouTube
Instagram
WhatsApp