April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலன் காக்கும் கூட்டணிக்கும் துரோக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி…

ஈரோட்டில் நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு…

ஈரோடு. ஏப்ரல். 03

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் என்பது மக்கள் நல கூட்டணிக்கும் மக்கள் விரோத கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. என ஈரோட்டில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பேசினார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் மே 04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

என்னை தொடர்ந்து நேற்று முன் தினம் திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் திமுக மற்றும் மதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

தொடர்ந்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தொகுதிகளில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த தேர்தல் பிரச்சாரம் ஈரோடு அருகே உள்ள திண்டல் பஞ்சாபி ஹோட்டல் அருகே நடைபெற்றது.

கூட்டத்தில் ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளர் சு. முத்துசாமி, மொடக்குறிச்சி வேட்பாளர் சா. செந்தில்நாதன், பெருந்துறை வேட்பாளர் தோப்பு என் டி வெங்கடாசலம், பவானி தொகுதி வேட்பாளர் கே ஏ சேகர் அந்தியூர் தொகுதி வேட்பாளர் எம். சிவபாலன், கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளர் எண். நல்லசிவம், பவானிசாகர் தொகுதி வேட்பாளர் பி எல் சுந்தரம் காங்கேயம் தொகுதி வேட்பாளர் மு பெ. சாமிநாதன் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் கை சின்னத்திற்கும், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது… பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மண்ணில் நின்று பேசுவதை பெருமையாக கருதுகிறேன் மேலும் தந்தை பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை அண்ணா இல்லை என்றால் கலைஞர் இல்லை கலைஞர் இல்லை என்றால் நாம் எல்லாம் இல்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல் என்பது மக்கள் நலனுக்காக பாடுபடும் கூட்டணிக்கும், மக்கள் விரோத, மக்கள் துரோக கூட்டணிக்கும் தான் போட்டி நடைபெறுகிறது.

கடந்த நம்முடைய ஐந்தாண்டு கால ஆட்சியில் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கான பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

அதில் குறிப்பாக பெண்களுக்கான விடியல் பயணம், மகளிர் உரிமை த்தொகை, காலை உணவு திட்டம், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், தமிழ் புதல்வன் மற்றும் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம் அதற்கு தற்போது நேரம் இல்லை.

தற்போது கூட 5 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை ஒரு கோடியே 32 மகளிர் வங்கிக் கணக்குகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வந்து தொழில் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் வழிவகை செய்துள்ளது இந்த திராவிடம் ஆனால் ஆட்சி.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை அத்திக்கடவு அவினாசி திட்டம் முழு அளவில் செயல்படுத்தப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக உள்ளது. மேலும் ஈரோடு கோபிசெட்டிபாளையம் அந்தியூர் சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கான பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலைக்கு முழு உருவ பெண்களை சிலை அமைக்கப்பட்டும், மாவீரர் பொல்லான் அவர்களுக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பால்வளப் புரட்சிக்கு வித்திட்ட ஐயா பரமசிவம் மற்றும் விவசாயத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஐயா இயேசுவின் போன்றவர்களுக்கு திருஉருவ சிலை ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற ஈரோடு மாவட்டத்திற்கு எண்ணற்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை இந்த திராவிட மாடல் அரசு இந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது போன்று மக்கள் நலத்திட்டங்கள் தொடர இந்த திராவிடம் மாடல் ஆட்சி தொடர நீங்கள் திமுக மற்றும் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.

அதற்காக உதயசூரியன் மற்றும் கதிர் அருவாள் சின்னங்களில் வாக்களிக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறார். இப்படி ஆட்சியில் தான் பொள்ளாச்சியில் அவர்களுடைய கட்சிக்காரர்களால் பல இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர்.

எடப்பாடி பழனிசாமியின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என இன்று வரை தமிழக மக்கள் பேசி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்கி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கி கொடுத்த ஆட்சி இந்த திரவ மாடல் ஆட்சி.

தமிழகம் மென்மேலும் வளர பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும் இங்கு போட்டியிடக்கூடிய நம்முடைய வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு தமிழக முதல்வர் பேசினார்.

கூட்டத்தில் வேட்பாளர்கள், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ், முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, திமுக துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, முன்னாள் எம்பி எம். கந்தசாமி, சிபிஎம் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு திண்டல் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Facebook
YouTube
Instagram
WhatsApp