புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் இலட்சிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமார் அவர்களை ஆதரித்து, தர்பூசணி சின்னத்தில் வாக்களிக்குமாறு வலியுறுத்தி கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதன் ஒரு பகுதியாக, நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட புவன்கரே வீதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவை கோரினார். இந்நிகழ்வில் தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும், நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலின் நிலையை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்கள் நேரில் பார்வையிட்டார். அப்பகுதி பொதுமக்கள், அந்த வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, மார்க்கெட் பகுதியில் கடை கடையாக சென்று வியாபாரிகளை பொதுமக்களையும் சந்தித்து, ஜெயக்குமார் அவர்களுக்கு ஆதரவு கோரி வாக்குகளை சேகரித்தார்.
இதற்கிடையில், நெல்லித்தோப்பு தொகுதி வேல்முருகன் நகரைச் சேர்ந்த திமுக கட்சியில் இருந்து விலகிய பன்னீர், மதிவாணன், ராஜேந்திரன், சக்திவேல், சிலம்பரசன் உள்ளிட்டோர், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் முன்னிலையில் இலட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்வில் கட்சியின் தொண்டரணி தலைவர் மதன் உடன் இருந்தார்.
மேலும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோருக்கு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதில் மாநில இளைஞரணி செயலாளர் பாலு, தொகுதி பொதுச் செயலாளர் பிரசாந்த், திருபுவனை தொகுதி தலைவர் மதன்ராஜ், இளைஞரணி செயலாளர் தாஸ், செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெறும் இந்த தீவிர பிரச்சாரம் மற்றும் பல்வேறு தரப்பினரின் ஆதரவு, இலட்சிய ஜனநாயக கட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
நெல்லித்தோப்பு தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தீவிர வாக்கு சேகரிப்பு – பல தரப்பினரின் ஆதரவு அதிகரிப்பு …

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு