புதுச்சேரி, ஏப்ரல் 1:
புதுச்சேரி மாநிலம், உழவர்கரை தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தலில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசி பாலன், தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தனக்கு ஒதுக்கப்பட்ட ‘விசில்’ சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், சசி பாலன் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தின் போது, சசி பாலன் செல்லும் வழிநெடுகிலும், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும், அந்தந்த பகுதி பொதுமக்களும் மிகுந்த உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர்.
வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்தும் மக்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். மக்களின் இந்த அன்பான வரவேற்பு, தனது வெற்றிக்கு உத்வேகம் அளிப்பதாக வேட்பாளர் சசி பாலன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
உழவர்கரை தொகுதியில் வேட்பாளரின் இந்த அதிரடி வாக்கு சேகரிப்பு, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..