கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் தேர்தல் பணிமனை அலுவலகத் திறப்பு விழா இன்று எழுச்சியுடன் நடைபெற்றது.
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், கழகப் பொதுக்குழு உறுப்பினருமான முன்னாள் எம்.எல்.ஏ. டி.எம். தமிழ்செல்வம் அவர்கள், மத்தூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் பணிமனை அலுவலகத்தை ரிப்பன் வெட்டி கோலாகலமாகத் திறந்து வைத்தார். தொடர்ந்து, அலுவலகத்தில் அவர் குத்துவிளக்கேற்றி முறைப்படி தேர்தல் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் வகையில், விழாவில் கலந்து கொண்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு லட்டு மற்றும் மிச்சர் உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னதாக விழாவுக்கு வருகை தந்த வேட்பாளருக்கு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.கூட்டணி கட்சிகள்
இவ்விழாவில் அதிமுக-வின் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். மேலும், கூட்டணி கட்சிகளின் முக்கியப் பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் இதில் பங்கேற்று சிறப்பித்தனர். தேர்தல் களப்பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது குறித்தும், தொகுதியில் வாக்குச் சேகரிப்பினைத் தீவிரப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மத்தூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த அலுவலகத் திறப்பு விழாவினைத் தொடர்ந்து, மத்தூர் பகுதியில் தேர்தல் பணிகள் தற்போது விறுவிறுப்படைந்துள்ளன


செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..