April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்..

ஈரோடு மேற்கு தொகுதியில் அமைச்சர் சு. முத்துசாமி தீவிர தேர்தல் பிரச்சாரம்.

ஈரோடு. மார்ச். 31

சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறும் நிலையில், ஈரோடு மேற்கு தொகுதியில் அமைச்சர் முத்துசாமி நேற்று முதல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 நடைபெற உள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவும், மே நாலாம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கின்றது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து உள்ள நிலையில் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சு முத்துசாமி திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடை சூழ நேற்று காலை 7:00 மணி முதல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி நேற்று காலை 7 மணி அளவில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் முத்துசாமி காரப்பாரை புது காலனி கீழ் திண்டல், மேல் திண்டல், வித்யா நகர், லட்சுமி கார்டன் பகுதியில் நேற்று காலை தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது அவருக்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் ஆராத்தி எடுத்து தங்களின் ஆதரவுகளை தெரிவித்தனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ், உள்ளிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் சென்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp