வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திரா நகர் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளர் ராபர்ட் ஜேசுதாஸ்
அவர்கள் பேட்ஸ்மேன் சின்னத்தில் போட்டியிருக்கிறார். அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட ஜிப்மர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் பேட்ஸ்மேன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் அப்பகுதி மக்களிடம் என்னை வெற்றி பெற செய்தால் இந்திரா நகர் தொகுதி முழுவதும் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் மழை நீர் தேங்காமல் வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவதாகவும் மேலும் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் மற்றும் இந்திரா நகர் தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன் எனவும் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் வாக்கு சேகரிப்பின் போது அவருடன் ஏராளமான பெண்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்திரா நகர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்ச்சை வேட்பாளர் ராபர்ட் ஜேசுதாஸ் ஜிப்மர் குடியிருப்பு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

More Stories
காமராஜர் நகர் தொகுதி முழுவதும் என்னார் காங்கிரஸ் தொகுதி தலைவர் தணிகைவேல் என்ற குமார் தலைமையில் கூட்டணி கட்சி ஜே சி எம் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களுக்கு காமராஜர் நகர் தொகுதி முழுவதும் என் ஆர் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் மகளிர்கள் மற்றும் இளைஞர்கள் என பல தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்தனர் இதில் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது
ஈரோடு மொடக்குறிச்சி தொகுதி பாஜக தேர்தல் பணிமனை திறப்பு விழா…
காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்