April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி அரியங்குப்பம் சுயேச்சை வேட்பாளர் ஆ. ரகு மீதுள்ள குற்றவியல் வழக்குகள் விவரம் (இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வெளியிடப்படுவது)

புதுச்சேரி, மார்ச் 27,

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், அரியங்குப்பம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஆ. ரகு (எ) ரகுநாதன், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி தன் மீதுள்ள குற்றவியல் வழக்குகள் குறித்த விவரங்களைச் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்கு விவரங்களை பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பாளர் ஆ. ரகு சமர்ப்பித்துள்ள விவரங்கள் வருமாறு:

வேட்பாளர் விவரம்:

அரியங்குப்பம், ஆர்.கே. நகர், திரௌபதியம்மன் வீதியைச் சேர்ந்த ஆ. ரகு, இத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

நிலுவையில் உள்ள வழக்குகள்:

வழக்கு எண் 76/2025: புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இவ்வழக்கு, அரசுப் பணிக்கு இடையூறு விளைவித்தல் தொடர்பாக 189(2), 296, 132 உள்ளிட்ட பல்வேறு பி.என்.எஸ் (BNS) பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு எண் 192/2024: நிர்வாக நடுவர் (Executive Magistrate) முன்னிலையில் நிலுவையில் உள்ள இவ்வழக்கு, தனது வீட்டை அரசு இடித்த போது அதனைத் தடுத்தது மற்றும் ஜீவ சமாதி போராட்டம், குடியேறும் போராட்டம் நடத்தியது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தண்டனை விவரம்:

வேட்பாளர் ஆ. ரகு மீது இதுவரை எந்தவொரு வழக்கிலும் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர்கள் வேட்பாளரின் பின்னணியைத் தெரிந்து கொண்டு வாக்களிக்க ஏதுவாக இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தத் தகவல்கள் வேட்புமனுத் தாக்கலின் போது சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்திலும் (Affidavit) இடம்பெற்றுள்ளன.

Facebook
YouTube
Instagram
WhatsApp