திராவிட முன்னேற்றக் கழகம் மாநில மாநாடுகளை கொள்கை முழக்கத்தோடு நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதை மரபாக கையாண்டு வருகிறது. அதன்படி, 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கழகத்தின் பலத்தை நிரூபிக்கும் வகையில் 12–வது மாநில மாநாடு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சிறுகனூரில் 9–ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது.
நம் உயிரினும் மேலான கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முதல்வர் அண்ணன் தளபதியார் அவர்கள் தலைமையில், “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற தலைப்பில் நடைபெறும் இம்மாநாட்டில் புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரும் பங்களிப்பை அளிப்பது அனைத்து உடன்பிறப்புகளின் கடமை.
ஆகவே, சிறப்புமிக்க இம்மாநாட்டில் “இப்படை தோற்கின் எப்படி வெல்லும்” என்கிற கூற்றை பறைசாற்றுகின்ற வகையில் மாநில கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், மொழிப்போர் தியாகிகள், மூத்த முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று 9ஆம் தேதி காலை 11.00 மணிக்கு லப்போர்த் வீதியில் உள்ள தலைமைக் கழகத்தில் ஒன்றிணைந்து கட்டுப்பாடோடு மாநாட்டிற்கு பயணிப்போம் வாரீர் ! வாரீர் !! என அன்புடன் அழைக்கின்றேன்.
என்றும் கழகப் பணியில்,
இரா. சிவா, எம்.எல்.ஏ.,
மாநில கழக அமைப்பாளர்,
புதுச்சேரி மாநில தி.மு.கழகம்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!