புதுச்சேரி:
புதுச்சேரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 124-ஆம் ஆண்டு மாசி மக தீர்த்தவாரி விழா இன்று பக்தி பரவசத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. அதில் ஒரு பகுதியாக புதுச்சேரி கருவடிக்குப்பம் வாகை அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சிக்கு, அதன் நிறுவனத் தலைவர் ஜெகன் தலைமை தாங்கி உணவுகளை வழங்கினார். உடன் துணைத்தலைவர் ஜெயேந்திரன், செயலாளர் வழக்கறிஞர் கார்த்திக், துணைச் செயலாளர் ஹரி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்