திண்டிவனம் பிப் 24.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுக்கா நெடிமோழினூர் ஊராட்சி மோழினூர் பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் பாலமுருகன், முத்துமாரியம்மன் கெங்கையம்மன் போத்தி அம்மன் நவகிரக தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் 20/02/2026 அன்று காலை மங்கள இசை கணபதி ஹோமம் , நவகிரக ஹோமம் மஹாலக்ஷ்மி ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து
சனிக்கிழமை சுவாமி சிலைகள் கரிக்கோலம்
விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி நடைபெற்று
ஞாயிற்று கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசை விக்னேஸ்வர பூஜை நாடி சந்தனம் மஹா பூர்ணாஹூதி நடைபெற்று
கடம் புறப்பாடு மேளதாளம் வழங்க கலசம் ஊர்வலம் நடைபெற்று கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்