June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதியதாக வீடு கட்டித்தருகிறோம் என்று கூறி இருளர் இன மக்களின் வீட்டை இடித்து நடுத்தெருவில் நிற்க வைத்த அரசாங்கம்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்.

தொப்படிகுப்பம் கிராமத்தில் வீடுகளின்றி இருளர்இன மக்கள் தவிப்பு

ஒரு வருட காலமாகியும் வீடுகள் கட்டி முடிக்கப்படாததால் வேதனை – தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல் – 15 நாட்களுக்குள் முடித்துக்கொடுக்கப்படாவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வெப்பாலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தொப்படிகுப்பம் கிராமத்தில் 11 குடும்பத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் வாழ்ந்து வந்தனர். கடந்த பிப்பிரவரி 2025ம் ஆண்டு பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 11 வீடுகளும் சேதமாயின. வசிக்க தகுதியற்ற வீட்டை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட அரசு உத்திரவிட்டது. இதனையடுத்த அப்போது இடிக்கப்பட்ட வீடு இன்று வரை கட்டி முடிக்கப்படாமல் இருந்து வருவதால், 11 குடும்பத்தை சேர்ந்த 40ற்கும் மேற்பட்டோர் வசிக்க வீடுகளின்றி திறந்த வெளியில் பனி, குளிர், மழை, வெளியி உள்ளிட்ட இயற்கை சூழலால் அவதியடைந்து வருகின்றனர். மாந்தோப்புகளில் காவல் பணி மற்றும் கூலி வேலை செய்து பிழைத்து வரும் இவர்கள் வீடுகள் இல்லாத காரணத்தால் வேலைக்கும் செல்லாமல் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக உண்ண உணவின்றி அவதியடைந்து வருகின்றனர். ஒரு மாதத்தில் முடிக்க வேண்டிய வேலையை ஒரு வருடமாகியும் முடித்துக்கொடுக்காமல் இருந்து வரும் ஒப்பந்ததாரரின் பணியை ரத்து செய்துவிட்டு புதிய ஒப்பந்ததாரரை நியமித்து பணியை விரைந்து முடித்துக்கொடுக்க கோரிக்கை வைக்கின்றனர். தற்போதுள்ள ஒப்பந்ததாரர் திமுகவை சேர்ந்தவர் என்பதால், அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்து வருகி்ன்றனர்.
இந்த செய்தியை ஊடகம் வாயிலாக தெரிந்துக்கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரான வேல்முருகன் கட்சி நிர்வாகிகளுக்கு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டுள்ளார். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் நெப்போலியன் தலைமையில் கட்சியினர் இருளர்இன மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அலைபேசி மூலம் பேசினார். அதனடிப்படையில் 15 நாட்களுக்குளாக முழுவதுமாக வீட்டுப்பணி முடிக்கப்பட்டு இருளர்இன மக்களுக்கு பயன்பாட்டிற்கு கொடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அங்கிருந்து சென்றனர்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் நெப்போலியன் தெரிவித்ததாவது, இருளர் இன மக்கள் மாற்று இடம் இல்லாமல் வெயிலிலும் பணியிலும் அவதியடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் முழுநிதியையும் ஒதுக்கிய பிறகும், ஒப்பந்ததாரர் பணம் கிடைக்கவில்லை என காலம் தாழ்த்தி வருகிறார். இன்னும் 15 நாட்களுக்குள் பணியை நிறைவு செய்யாவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.