வேலூர், பிப் 04 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கியதை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி ஜே.பி.எம். மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 1000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலு விஜயன், வேலூர் மேயர் சுஜாதா, ஒன்றியக்குழுத்தலைவர்கள் அமுதா ஞானசேகரன் (வேலூர்), என்.இ.சத்தியானந்தம் (குடியாத்தம்), திவ்யா கமல்பிரசாத் (கணியம்பாடி), பேர்ணாம்பட்டு நகர்மன்ற தலைவர் பிரேமா, வேலூர் வட்டாட்சியர் இல.வடிவேலு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
உள்ளாட்சித் துறையில் ஒரே நேரத்தில் 41 இடங்களில் விஜிலென்ஸ் போலீஸாரால் நடத்திய ரெய்டில்.. ரூ.58 லட்சம் சிக்கியது!
ஈரோடு மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை..