புதுச்சேரி, பிப். 02:
புதுச்சேரி ராஜ் பவன் தொகுதி வேட்பாளர் விக்னேஷ் கண்ணன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது புதிய தேர்தல் அலுவலகத்தைத் திறந்துள்ளார்.
புதுச்சேரி செட்டித் தெருவில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் அலுவலகத்தை, முன்னாள் எம்.பி. கண்ணனின் மனைவியும், வேட்பாளரின் தாயாருமான சாந்தி கண்ணன் அவர்கள் குத்துவிளக்கேற்றி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
விழாவின் ஒரு பகுதியாக, மறைந்த மக்கள் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கண்ணன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ராஜ் பவன் தொகுதியைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் எம்.பி. கண்ணன் அவர்களின் மகனான விக்னேஷ் கண்ணன், இந்தத் தேர்தலில் ராஜ் பவன் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!