February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :

வராலற்று சிறப்பு மிக்க பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளதைகழகப் பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்,முன்னாள் முதலமைச்சர்,புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் வரவேற்றுள்ளார்.

அவரை பின்பற்றி புதுச்சேரி மாநில அதிமுக மத்திய பட்ஜெட்டை மனதார வரவேற்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கான முழுமையான பட்ஜெட் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக உள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு உற்பத்திக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் வர்த்தக வியாபாரிகள் பயனடைவார்கள்.

பட்ஜெட்டில் சுமார் 13 லட்சம் கோடி உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்வழித்தடங்கள் இணைப்பால் நீர் வழி போக்குவரத்து, நீர் வழி வர்த்தக வியாபாரமும் சிறப்படையும்.

வெளிநாட்டு இறக்குமதியை குறித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்த பட்ஜெட் உதவும். ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் உலகளவில் இந்தியாவை பொருளாதாராத்தில் மேம்படுத்தவும் ஏழை.எளிய . நடுத்தர மக்களுக்களின் வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட்டாக உள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு இறப்பிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் செங்கோட்டையன் உளறி உள்ளார்.

தூத்துக்குடி சம்பவம் என்பது ஆயுதம் ஏந்திய ஆர்ப்பாட்டகார்ர்கள் மீது காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு மரணமாகும், ஆனால் கரூர் சம்பவம் திட்டமிட படாத காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்பாகும். இதில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஏன் ஆறுதல் கூறவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்க தைரியமில்லாமல் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை உதாரணம் காட்டுவது சிறுபிள்ளைதனமானது.

மத்திய அரசு நாடு முழுவதும் கர்ப்ப பை புற்றுதோயால் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க எச்பிபி தடுப்பூசி போட வேண்டும் என அனைத்து மாநிலத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதற்கான பணிகளை நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியிலும் கருப்பை வாய் புற்றுநோயால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே புதுச்சேரி அரசு கருப்பை வாய் புற்று நோயில் இருந்து பெண்களை பாதுகாக்க பெண்கள் கல்வி பயிலும் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 15 வயதில் இருந்து 25 வயது வரை உள்ள பெண்களுக்கு HPV தடுப்பூசியை இலவசமாக போட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினம் நாளை காலை தலைமை கழகத்தில் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து ஊர்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில கழக இணைச் செயலாளர் ஆர். வி. திருநாவுக்கரசு,புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில கழக துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, குமுதன்,. முன்னாள் மாநில புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் பார்த்தசாரதி, மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மீனவர் அணி செயலாளர் ஞானவேல், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், மாநில கலைப் பிரிவு செயலாளர் செந்தில் குமார்,மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் சையது அகமது மொய்தீன்,மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் ரபீக் பிரம்மா,தொகுதி கழக செயலாளர்கள் நடேசன், குணசேகர், சம்பத். சிவக்குமார், இளங்கோ,கோபால், துரை ஆகியோர் உடனிருந்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp