பத்திரிகை செய்தி
புதுச்சேரி மாநிலம் கதிர்காமம் தொகுதி திமுக சார்பில், தொகுதி செயலாளர் வடிவேல் ஏற்பாட்டில் திராவிட பொங்கல் விழா மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோவில் எதிரில் நேற்று மாலை நடைபெற்றது.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், மாநில கழக அமைப்பாளருமான இரா. சிவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி கலந்து கொண்டு திராவிட பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமான மகளிர் புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இதையடுத்து நாட்டுப்புற பாடல் இசை கச்சேரி, மயிலாட்டம், ஒயிலாட்டம் என தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன. மேலும் விழாவில் கழக மூத்த முன்னோடிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய கழக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தந்து, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருவகிறது. உங்களில் ஒருவராக, உங்களுக்காக ஓடோடி உழைப்பதற்கும், உங்களுக்கு பணி செய்ய உத்தரவிடுங்கள் என கேட்டு நாங்கள் வந்துள்ளோம். திராவிட முன்னேற்ற கழகம் தாய் பாசம் மற்றும் சகோதர பாசம் கொண்ட இயக்கம். புதுச்சேரியை பொருத்தவரைக்கும் இந்த ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக அமையும், வளமான வலிமையான புதுச்சேரியை உருவாக்குவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே மக்கள் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூ. மூர்த்தி, நந்தா. சரவணன், கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ந. தங்கவேலு, டாக்டர் கா. மாயக்கிருஷ்ணன், பெ. பழநி, மு. பிரபாகரன், எஸ். எஸ். செந்தில்குமார், நா. கோபாலகிருஷ்ணன், எஸ். அமுதாகுமார், எஸ். நர்கீஸ், இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் பசுபிக் சங்கர், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், வ. சீத்தாராமன், செ. நடராஜன், ஜி.பி. சவுரிராஜன், எல். மணிகண்டன், கோ. தியாகராஜன், ர. சிவக்குமார், ரா. ஆறுமுகம், க. ராஜாராமன், பி.சா. இளஞ்செழியபாண்டியன், கலிய. கார்த்திகேயன், சே. ராதாகிருஷ்ணன், ம. கலைவாணன், அணிகளின் அமைப்பாளர்கள் மாணவர் அணி எஸ்.பி. மணிமாறன், தொமுச அண்ணா அடைக்கலம், வழக்கறிஞர் அணி ச. பரிமளம், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், தொண்டர் அணி வீரன் (எ) வீரய்யன், இலக்கிய அணி சீனு. மோகன்தாசு, மீனவர் அணி ந. கோதண்டபாணி, ஆதிதிராவிடர் நலக்குழு சி. ஆறுமுகம், கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை கி. சங்கர் (எ) சிவசங்கரன், நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், விளையாட்டு மேம்பாட்டு அணி ந. ரவிச்சந்திரன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி ம. மதிமாறன், மருத்துவர் அணி லூ. ஆனந்த் ஆரோக்கியராஜ், மகளிர் தொண்டர் அணி சுமதி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.