செஞ்சி,நவ.03
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புனித அந்தோனியார் ஆலயத்தில் வருடாந்திர கல்லறைத் திருவிழா ஆன்மிகமும் பக்தி உணர்வும் மிகுந்த சூழலில் சிறப்பாக நடைபெற்றது.
இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும், மறைந்த ஆத்மாக்களின் நினைவாக சத்தியமங்கலம் கல்லறைத் தோட்டத்தில் பக்தியுடன் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிகழ்வில், சத்தியமங்கலம் புனித அந்தோனியார் ஆலய பங்குத் தந்தை ஏ. சிரில் தலைமையில் திருவிழா நடைபெற்றது. இதில் மண்ணின் மைந்தர் பாதர் சுதாகர் கலந்து கொண்டு, பங்குத் தந்தையுடன் இணைந்து கூட்டு திருப்பலி நடத்தினர்.
திருப்பலிக்குப் பிறகு, பங்குத் தந்தை ஏ. சிரில் அவர்கள் கல்லறைத் தோட்டத்திற்குள் சென்று, ஒவ்வொரு கல்லறையிலும் தீர்த்தம் தெளித்து, மந்திரித்து, ஆசீர்வாதம் வழங்கினார்.
மக்கள் தங்கள் மறைந்த உறவினர்களின் நினைவாக கல்லறைகளின் அருகில் நின்று மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் அர்ப்பணித்து, கண்ணீர் மல்க பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பலரும் ஆன்மிக துயரமும் இறைநம்பிக்கையும் கலந்த உணர்வுடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.
இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித அந்தோனியாரிடம் தங்கள் வேண்டுதல்களை சமர்ப்பித்தனர்.

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு