February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

துவரங்குறிச்சி அருகே சாலை ஓரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவரின் மீது நான்கு சக்கர வாகன மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்:

திருச்சி மாவட்டம் , மருங்காபுரி வட்டம் , கலிங்கப்பட்டி , காலனி தெருவை சேர்ந்த பழனி மகன் ஆண்டியப்பன் ( 70 ), இவர் கூலி வேலை செய்து வருவதாகவும் , பொன்னமராவதி – பாலக்குறிச்சி செல்லும் மாநில தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிழக்குக்காடு என்னும் பிரிவு சாலை அருகே சாலையின் ஓரமாக மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது கலிங்கப்பட்டி , கிழக்குக்காடு கிராமத்தைச் சேர்ந்த அழகன் என்பவரது மகன் பிரேம்குமார் என்பவர் தனது (Tata indra) நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆண்டியப்பன் என்பவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்ததால் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வளநாடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp