டிசம்பர்:30
கோவை மாவட்டம், காரமடை காந்தி மைதானம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரி வாசன் ஐயப்பன் ஸ்ரீ அம்மன் திருக்கோயிலில் 56 ஆம் ஆண்டு விளக்கு பூஜை மற்றும் அன்னதான விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு 28ம் தேதி காலை மகா கணபதி ஹோமம் பூஜை தொடங்கி ஐயப்ப சுவாமிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. தொடர்ந்து செண்டை மேளம், நாதஸ்வர இசை, வான வேடிக்கை, பஜனையுடன் ஸ்ரீ ஐயப்பன் திருவீதி உலா தேரில் எழுந்தருளி அனைவருக்கும் அருள் பாலித்தார். இதனை அடுத்து மாலை விளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி கோவிலில் தொடங்கி தட்டில் விளக்குடன் தேர்வீதிகளில் அணிவகுப்பாய் சென்று கோவிலை வந்தடைந்தார்கள். மறுநாள் 29ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று அதிகாலையில் மாலையிட்ட ஐயப்ப பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் கலந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பின் மதியம் 12 மணிக்கு கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்தை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் தலைவர் பாரதி தொடங்கி வைத்தார். செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
காரமடையில் உள்ள அருள் தரும் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் 56 ஆம் ஆண்டு விளக்கு பூஜை மற்றும் அன்னதான விழா!!

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!