February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர் – சேலத்தில் வரும் 29ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ள பொதுக்குழு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு அல்ல அதில் எடுக்கப்படக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்

பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தான் செயல்படுகிறது

ஜிகே மணி கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அவரின் பதிலை வைத்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் முடிவெடுப்பார் என பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெயங்கொண்டத்தில் அரசு மதுபான கடை திறப்பதற்க்கு கட்டிடம் கட்டப்பட்டுவருவாதகவும் அதில் அரசு மதுபானக் கடை திறக்க கூடாது என பா.ம.க வழக்கறிஞர் பாலு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியை சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

ஜிகே மணி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை மீறியிருக்கிறார் என்று அவருக்கு விளக்கம் கேட்டு கடந்த 18ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருக்கோம். அவருடைய பதில் இதுவரையில் வரவில்லை.
அவர் கொடுக்கும் விளக்கம் ஏற்புடையதா என்பது குறித்து எங்களுடைய கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழு விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கும்
சேலத்தில் வரும் 29ஆம் தேதி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுவதாக சொல்லப்படும் பொதுக்குழு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு அல்ல
பொதுக்குழுவை கூட்டுவதற்கான அதிகாரம் கட்சியினுடைய தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது.
எனவே அதை பாட்டாளி மக்கள் கட்சியினுடைய பொதுக்குழுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
அந்த கூட்டத்தில் எடுக்கக்கூடிய எந்த முடிவும் பாட்டாளி மக்கள் கட்சியை கட்டுப்படுத்தாது.
இதுபோன்று பாட்டாளி மக்கள் கட்சியினுடைய பொதுக்குழு என்ற பெயரில் வந்திருக்கக்கூடிய இந்த அறிவிப்பு தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடிதம் அனுப்பியிருக்கிறோம் என கூறினார்

Facebook
YouTube
Instagram
WhatsApp