வந்தவாசி, டிச 22:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் வந்தவாசி கே.ஏ.வகாப் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருவண்ணாமலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மாவட்ட தலைவர் டி.எம்.பீர்முகமது தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முகமது அலி, மாவட்ட துணைத் தலைவர் லியாகத் அலி, துணை செயலாளர்கள் செய்யது உசேன், அப்துல் வாகித், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.மாலிக் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், மாநில துணை செயலாளர் கே.ஏ.டபிள்யூ. அப்துல் காதர் ஷரீஃப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட, நகர ஒன்றிய கிளை நிர்வாகிகளுக்கு மாவட்டம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் வரும் ஜனவரி 28 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற உள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டிற்கு மாவட்ட அளவில் அதிக அளவில் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் நகர செயலாளர் ஜா.மன்சூர் அலி நன்றி கூறினார்.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு