திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமலை , சுரைக்காய் பட்டியை சேர்ந்த சின்ன காளை மகன் கருப்பையா (80), AEO RTD உதவி கல்வி அதிகாரியாக பணிபுரிந்து வந்த நிலையில் வயது ம மூப்பால் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் மகன் வடிவேலு வீட்டில் இருந்து வந்துள்ளார் . இளைய மகன் விஜயகுமார் தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பலமுறை அண்ணன் வீட்டிற்கு சென்று மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்ல பலமுறை முயன்ற போது தனது அண்ணன் வடிவேலு மற்றும் அக்கா அமுதா ஆகியோர் அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது , இந்நிலையில் இன்று திடீரென தந்தை இறந்து விட்டதாகவும் மகன் விஜயகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது ,தனது தந்தை இறப்பதற்கு முன்னதாக தன்னிடம் 2 கோடி ரூபாய் பணம் வைத்து இருப்பதாக கூறியுள்ளார் ,அதன் அடிப்படையில் தனது தந்தையின் பணத்திற்காக தனது தந்தையை சிகிச்சை பார்க்க விடாமல் தடுத்து விட்டதாகவும் எனது தந்தையின் இறப்பில் கொலை செய்யப்பட்டுள்ளாரா? இல்லை இயற்கை மரணமா ? என துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பெயரில் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து இறந்த கருப்பையாவின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலையா? இயற்கை மரணமா ? தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அண்ணன் , அக்கா ஆகிய இருவர் மீது தம்பி புகார்:

More Stories
ஆதாய கொலை இந்த ஆண்டு இல்லை.பொது இட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது!!
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமுமுக சார்பில் புகார் மனு..!!!
சேலத்தில் திருமண வரவேற்பு விழாவில் மோதல்.