தளபதி போட்ட பக்கா ஸ்கெட்ச்.தொண்டர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.
நடிகர் விஜய் தீவிர அரசியல் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று விஜய் மக்களை சந்தித்து வந்தார். அப்படி செல்லும் வழிகளில் அவரே எதிர்பார்க்கவில்லை என்றாலும் அது ரோடு ஷோ போல தான் நடந்தது. அவர் வாகனத்தின் உள்ளே அமர்ந்திருந்தும் அவரைக் காண வழி முழுவதும் பொதுமக்களும், ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்கள் குவிந்தனர். அதிலும் பல பேர் இருசக்கர வாகனங்களிலும் கார்களிலும் விஜயின் வாகனத்திற்கு பின்னும் முன்னும் அவரை பின்தொடர்ந்தனர்.
இதனால் அவர் நாமக்கல்லில் இருந்து கரூருக்கு செல்ல பழமொழி நேரம் தாமதம் ஆனதால் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது விஜய் அதனை சட்டரீதியாக கையாண்டு வருகின்றார். இதனைத் தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி முதல் மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக சேலத்தில் அனுமதி கேட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களைச் சொல்லி போலீசார் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
இதனால் தேதி மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அதே டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துவதற்கு விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக புதுச்சேரி காவல்துறையிடம் தமிழக காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காலாபட்டில் தொடங்கி கன்னிய கோவில் பகுதி வரை ரோடு ஷோ நடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் உப்பளத்தில் விஜய் பேசுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. டிசம்பர் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விஜய் ரோடு ஷோ நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.