திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 108 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவர் முருகேசன் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்திராகாந்தியின் உருவ படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து அக்கட்சியினர் வாழ்த்துக்கூறி முழக்கங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இதில் வட்டார தலைவர்கள் சிவ சண்முகம், கே.கே.பி,செல்வம், சத்தியசீலன், ராதாகிருஷ்ணன், தமிழரசன், தினேஷ் பாபு, குழந்தை, டைலர் பாலன், ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு தலைவர் நஜீம் அப்துல்லா, வீரபாண்டியன், பாண்டி முருகன், கணபதி, ஆரோக்கியம், வக்கீல் கலைராஜ், வக்கீல் ஜான் போஸ்கோ, பெரியசாமி, குமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
மணப்பாறையில் இந்திராகாந்தி பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!