முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ள நிலையில் அமைச்சர்கள் ஆய்வு..
ஈரோடு. நவ.
, 20
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் அமைக்கப்பட உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் திருஉருவ சிலைக்கு தமிழக முதல்வர் அடிக்கல், அங்கு அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் ஆங்கிலேய அரசை எதிர்த்து, வீரமாக போராடி சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை. அவர்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக ஈரோடு நாமக்கல் மாவட்டங்களில் தீரன் சின்னமலை அவர்களுக்கு பல இடங்களில் மணிமண்டபங்கள் திருஉருவ சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பேரூராட்சி, ஓடா நிலையில் தீரன் சின்னமலைக்கு சிறப்பான முறையில் மணிமண்டபம்.
இந்த மணிமண்டபத்திற்கு தீரன் சின்னமலை அவர்கள் பிறந்த தினம் மற்றும் மறைந்த தினத்திற்கு ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்து அவருக்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கி விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் அவரது மணிமண்டபம் அமைந்துள்ள ஓடாநிலை மணிமண்டப வளாகத்தில் தீரன் சின்னமலைக்கு, சென்னையில் உள்ளது போல் குதிரையில் அவர் அமர்ந்துள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வெண்கல சிலை ஓடாநிலை தீரன் சின்னமலை அவர்களின் மணிமண்டப வளாகத்தில்.
இந்த மண்டபமானது ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அங்கு அமைய உள்ளது.
இந்த நிலையில் வருகின்ற 27ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, தீரன் சின்னமலை அவர்களின் மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட உள்ள அவரது குதிரை வீரன் போன்ற வெண்கல திருவுருவ சிலை அமைக்கும் பணியினை தொடங்கி வைக்க உள்ளார்.
அங்கு இந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பணிகளை தமிழக வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் சு. முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ சாமிநாதன், ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதேபோல் சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் போர்ப்படை தளபதியாக விளங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் அவர்களுக்கும் அதே மணிமண்டபம் வளாகத்தில், தமிழ்நாடு செய்தித்துறை சார்பில் ரூபாய் 4.90 மதிப்பீட்டில் மணிமண்டப அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதனையும் அன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி சி சந்திரகுமார், ஆராய்ச்சலூர் பேரூராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் மொடக்குறிச்சி குணசேகரன், கதிர்வேல் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஆய்வின் போது கலந்து கொண்டனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்