February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு அருகே முத்து கவுண்டன் பாளையம் செண்பக மலை குமார் சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் கல்வெட்டு அகற்றம்…

கோவிலின் செயல் அலுவலர் திலகவதி மீது இணை ஆணையரிடம் பொதுமக்கள் புகார் மனு..

ஈரோடு. நவ. 16

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள முத்து கவுண்டன் பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செண்பக மலை குமார் சுப்பிரமணியர் கோவிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூன்று தலைமுறைனர் வைத்த, செயல் அலுவலர் அகற்றியதால் அவர் மீது இணை ஆணையாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லக்காபுரம கிராம கோவில்கள் நடைமுறை நிர்வாகிகள் எல் ஆர் சண்முகம் என்பவர் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது..

லக்காபுரம் அருள்மிகு ஸ்ரீ செண்பக மலை குமார சுப்பிரமணியர் கோவில் நடைமுறை நிர்வாகியாக இருந்து வந்தேன். இந்த திருக்கோவிலில் லக்கா புறத்தில் உள்ள நான் சார்ந்த மேற்கு வலசு ஆதிகுளம் கிழக்கு வலசு ஆ வன்குளம் மற்றும் அடிக்கரை வலசு, வில்லன் குலம், ஆகிய மூன்று குலத்தினர் மற்றும் கடந்த பல நூறாண்டுகளாக கோவிலை. ஆகவே கடந்த6/12/2019 அன்று நடைபெற்ற கும்பாபிஷேகமானது எங்களது மூன்று குலத்தினர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினோம்.

அதற்கு கல்வெட்டு ஆதாரமாக கோவில் அலுவலகத்தில் வைத்திருந்தோம். கோவில் நிர்வாகம் எங்களிடம் இருந்து இந்து சமய அறநிலை துறைக்கு, மாறி சமயம் அந்த கல்வெட்டை உடைத்து எடுத்து விட்டு அந்த இடத்தில் வர்ணம் பூசினார்கள். இந்த மனுடன் கல்வெட்டு இருந்த புகைப்படமும் தற்போது எடுத்துவிட்டு வர்ணம் பூசிய புகைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.

எனவே கோவில் நிர்வாகம், நாங்கள் மூன்று குலத்தினரும், தான் நிர்வாகித்து. ஆதாரத்தை அழிக்கும் நோக்கத்துடன் இந்த செயல் செய்யப்பட்டுள்ளது.

எனவே தாங்கள் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த இடத்தில் கும்பாபிஷேக கல்வெட்டை எடுத்த அந்த இடத்திலேயே பதித்து தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
YouTube
Instagram
WhatsApp