February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

எம்.எல்.ஏ அருளை குண்டர் சட்டத்தில் கைது செய்யாவிட்டால் பெரிய போராட்டம் நடத்துவோம்.

பாமக வழகறிஞர் பாலு பரபரப்பு புகார்.

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் ராமதாஸ் ஆதரவாளர். இந்நிலையில் 4-ஆம் தேதி வாழப்பாடி அருகே பாமக நிர்வாகியின் தந்தை இறுதிச் சடங்குக்கு சென்றபோது வாகன நிறுத்தத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

இதனையடுத்து அன்புமணி ஆதரவாளர்களுக்கும் அருள் ஆதரவாளர்களுக்கும் மோதல் உண்டானது. பின்னர் இரு தரப்புக்கும் எதிராக 4 வழக்குகள் பதிவாகின. இதனால் அன்புமணி தரப்பு 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அருள் மீது நடவடிக்கை இல்லை எனக் கூறி சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர். இதனையடுத்து பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அருள் மீது 4 புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனவும், ஆளும் கட்சி தொடர்பால் ஜிகே மணி, அருள் சட்ட ஒழுங்கை பாதிக்கின்றனர் எனக் குற்றம்சாட்டினார். இந்நிலையில் அருளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கைதான எங்கள் தரப்பினரை குண்டரில் போட 10 லட்சம் கொடுத்ததாக தகவல் எனவும் தெரிவித்தார்.

பின்னர் போலீசார் பாரபட்சம் காட்டினால் பெரிய போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தார். பாமகவில் 99% உறுப்பினர்கள் அன்புமணி பக்கம் உள்ளனர் எனவும், அருள் போலீசைப் பயன்படுத்தி பிரச்சனை உருவாக்குகிறார் எனக் கூறினார். இதனையடுத்து சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் நியமிக்க வேண்டும் அல்லது நீதிமன்றம் செல்வோம் எனத் தெரிவித்தார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp