February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கொரனா சிறப்பு ஊக்கத்தொகையை வாக்குறுதி தந்தவாறு தூய்மை பணியாளர்களுக்குவழங்க வலியுறுத்தி ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பாக திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் ஏஐடியூசி சங்கம் சார்பில் கொரனா சிறப்பு ஊக்கத்தொகையை
வாக்குறுதி தந்தவாறு தூய்மை பணியாளர்களுக்கு
வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இவ் ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் அருனகிரி தலைமை வகித்தார் காளிமுத்து சுப்பிரமணி பாக்கியம் சாந்தி தனலெட்சுமி மணிமுத்து மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் உள்ளாட்சி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் துணைச் செயலாளர் ஜனசக்தி உசேன் போக்குவரத்து கழக கிளை தலைவர் சரவணன் சி.பி.ஐ நகர செயலாளர் தங்கராஜ் துணைச் செயலாளர் திருநாவுக்கரசு முன்னல் நகர்மன்ற உறுப்பினர் சௌக்கத்அலி ஆகியோர் உரை நிகழ்தினார்கள் முன்னதாக

கொரனா சிறப்பு ஊக்கத்தொகையை
வாக்குறுதி தந்தவாறு
தூய்மை பணியாளர்களுக்கு
வழங்கிட
தரமான தளவாட சாமான்கள்
தூய்மை பணியாளர்களுக்கு
வழங்கிட

அரசாணை எண் 62 ன்படி
குறைந்த பட்ச ஊதியத்தை வழங்கிட
தமிழக அரசே நகராட்சி நிர்வாகமே
அவுட் சோர்சிங் பணியாளர்களுக்கு
மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த
708 ரூபாய் ஊதியத்தை வழங்கிட
அவுட் சோர்சிங் பணியாளர்களுக்கு
வார ஓய்வு வழங்கிட
மூன்று ஆண்டு பணி முடித்த
ஒப்பந்த பணியாளர்களை
தமிழக அரசே நிரந்தரம் செய் என்று முழக்கம் மீட்டனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp