கோவை நவ:13
கோவை மாவட்டம் ஓசூர் சாலையில் உள்ள கொடிசியா அலுவலகத்தில் ராணுவ தளவாடை உற்பத்தி துறை சார்ந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கூறியதாவது இந்திய ராணுவ தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பு மற்றும் நேரடியாக துறை சார்ந்த தொடர்பு கொண்டு வளர்ச்சி பெறுவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வு 2 நாள் கள் நவம்பர் (13- 14) நடைபெறும் என்று தெரிவித்தனர்.
மேலும் ராணுவத்திற்கு தேவையான தளவாடம் மற்றும் உற்பத்தி பாகங்கள், இந்திய அரசின் ஜெம் என்னும் ஈ- சந்தை குறித்த உரை, ட்ரூப் கம்பார்ட் லிமிடெட் நிறுவனத்தின் எதிர்கால தேவைகள், ராணுவ தளவாடை உற்பத்தியாளர்
களாக பதிவு செய்வதற்கு தேவையானவை, பி இ எம் எல் உற்பத்தி தேவைகள், உற்பத்தியாளர்களுக்கான தகுதி மற்றும் சான்றிதழ் நடைமுறைகள், ஶ்ரீஜன் மற்றும் ஶ்ரீஜன் டீப் போர்டல் மற்றும் அரசு திட்டங்கள், பரஸ்பர ஒப்பந்தங்கள் மற்றும் ரகசிய காப்பு வரைவுகள் குறித்த விவாதம், ராணுவ தளவாட உற்பத்திக்கு அரசு வழங்கக்கூடிய நிதி வாய்ப்புகள் ஆகிய குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சார்ட் அப் நிறுவனங்களுக்கு பல்வேறு நிதி பெறும் முறைகள் மற்றும் கடன் வசதிகள் குறித்து தேவையான தகவல்களை இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியும் யூனியன் வங்கியும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
இந்த கருத்தரங்கில் பங்கு பெறுவது ராணுவ தளவாட உற்பத்தி குறித்தும் அதற்கான கொள்கை வரைவுகள் தர கட்டுப்பாடுகள் ராணுவ உற்பத்தி பொருட்களை பெறுகின்ற முறை மற்றும் அதற்கான நிதி வாய்ப்புகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவும் நாட்டின் பெருமைமிகு ராணுவ தளவாட உற்பத்தியில் தற்சார்பு பெறவும் உதவும் என்று தெரிவித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்