திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் பாரத் வித்யாலயா பள்ளியில் எய்டு இந்தியா திட்டம் சார்பில் டெக்னாலஜியை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் திறன்கள் பயிற்சி மற்றும் மனக் கணக்குகள் வழி பயிற்சி உள்ளிட்டவைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அடிப்படைத் திறன்களான கூட்டல், கழித்தலில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும், சான்றிதழும் வழங்கப்பட்டது, இந்த நிகழ்விற்கு பள்ளி தாளாளர் சி.காசி தலைமை தாங்கினார். திட்ட மேலாளர் க.முருகன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் பங்கேற்று, கற்றல் திறன்களை பற்றிய விழிப்புணர்வு தகவல்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் யுரேகா ஆசிரியை சங்கரி, பள்ளி வகுப்பு ஆசிரியைகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அடிப்படைத் திறன் பயிற்சி சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்