February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சி தலைவருக்கான தேர்தல்..

துணைத் தலைவர் கவுன்சிலர்கள் பங்கேற்காத நிலையில் முந்தைய நிலையே தொடருமா..?…

ஈரோடு. நவ12

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தலைவருக்கான தேர்தலில், துணைத் தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இதனால் தலைவராக முன்பு இருந்தவரே அந்தப் பதவியில் தொடர்வாரா..,? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் எட்டு வார்டு கவுன்சிலர்கள் திமுகவை, மேலும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் மூன்று, சுயேச்சை கவுன்சிலர்கள் மூன்று பேரும் உள்ள நிலையில் அதிமுக சார்பில் ஒரு கவுன்சிலர் உள்ளனர். இதன்படி தலைவர் உள்ளிட்ட 15 கவுன்சிலர்கள் இந்த பேரூராட்சியில் கவுன்சிலராக உள்ளனர்.

இந்த நிலையில் தலைவருக்கும், துணைத் தலைவர் மற்றும் அவரது ஆதரவு கவுன்சிலர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இரு குழுக்களாக பேரூராட்சி நிர்வாகத்தில் இவர்கள்.

இந்த நிலையில் தலைவர் திலகவதி சுப்பிரமணியன் மீது பல்வேறு ஊழல் மட்டும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டை அவரது எதிர்ப்பு மனநிலையில் உள்ள கவுன்சிலர்கள் முன்வைத்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது வழக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் பேரூராட்சித் தலைவர் திலகவதியின் கணவர் சுப்பிரமணி மற்றும் துணைத் தலைவர் ராஜா கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கைகோர்த்து வலம்.

இதனடி இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு அரசியல் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திலும். எதிரொலித்தது. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பரஸ்பரம் இரு தரப்பினரும் ஒருவர் ஒருவர் அடையாளம் காட்டினர் ,

இந்த நிலையில் மோதல் முற்றியதால், பேரூராட்சி மன்ற தலைவர் திலகவதி சுப்பிரமணியன் மீது துணைத்தலைவர் ராஜா கமல்ஹாசன் தரப்பு கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். கடந்த 2025 மார்ச் 21ஆம் தேதி கொண்டுவரப்பட்ட இந்த நம்பிக்கை எல்லாம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, திலகவதி சுப்பிரமணியன் தனது தலைவர் பதவியை இழந்தார்.

தொடர்ந்து சில மாதங்கள் பேரூராட்சி போர்ட் இல்லாமல் செயல் அலுவலரின் வழிகாட்டுதல் படி பேரூராட்சி நிர்வாகம்.

இந்த நிலையில் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்து பதவி இழந்த திலகவதி சுப்பிரமணியன் நம்பிக்கை இல்லா தீர்மானம் செல்லாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் ராஜா கமல்ஹாசன் தரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வழக்கு தொடர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் நேற்று நவம்பர் 11ஆம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

காலை 11 மணி முதல் ஒரு மணிக்குள் இந்த தேர்தலை நடத்தும் முடிக்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தேர்தல் அதிகாரியாக கொடுமுடி தேர்வுநிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் சாகுல் அகமது இருந்து தேர்தலை நடத்தினார்.

இந்த நிலையில் காலை 10:30 மணி அளவில் பேரூராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் பங்கேற்க திலகவதி சுப்பிரமணியன் பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

ஆனால் எதிர் தரப்பை சேர்ந்த துணைத் தலைவர் ராஜா கமல்ஹாசன் தலைப்பை சேர்ந்த எந்த ஒரு கவுன்சிலர்களும் கூட்டத்திற்கு வரவில்லை.

இந்த பேரூராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலை நடத்த ஈரோடு கோட்டாட்சியர். இருந்த போதிலும் காலை முதல் மதியம் ஒரு மணி வரை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திலகவதி சுப்பிரமணியத்தை தவிர மற்ற 14 கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி அளவில் அங்கிருந்து கோட்டாட்சியர் சிந்துஜா புறப்பட்டு சென்றார்.

என்னை தொடர்ந்து கொடுமுடி தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவரா திலகவதி சுப்பிரமணியன் அந்தப் பதவியில் நீடிக்க வாய்ப்புள்ளதாக.

இதுகுறித்து செய்திகள் சேகரிக்க, தகவலை தெரிந்துகொள்ள பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் சென்ற செய்தியாளர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிகாரிகள் யாரையும் பார்க்க முடியாது என்று கூறி, செய்தியாளர்களை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினர்.

இதனால் செய்தியாளர்களுக்கு அடுத்த தகவல்கள் எதுவும் தெரியாமல் போனது.

தொடர்ந்து கொடுமுடி தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகத்தில் என்ன நடக்கவுள்ளது என்பதனை, அந்தப் பேரூராட்சியின் செயல் அலுவலரும் பேரூராட்சி நிர்வாகமும் தான் செய்தியாளர்களுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

கமிஷன், கரப்சன், ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் கொடுமுடி தேர்வு நிலை பேரூராட்சியை, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் ஒரு சிறப்பு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை.

Facebook
YouTube
Instagram
WhatsApp