வந்தவாசி, நவ 12:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் தேசிய கல்வி தின சிறப்பு உரையரங்கம் மற்றும் இரட்டையர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஆ.சித்ரா தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை கண்மணி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் மு.பிரபாகரன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். தேசிய கல்வி தினம் டாக்டர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளை நினைவுக்கூறும் வகையில் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வியே வாழ்க்கையின் திறவுகோல் ஆகும். எனவே அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் படித்து வாழ்க்கையின் உச்ச நிலையை தொட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இப்பள்ளியில் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 8 இரட்டையர்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலைஞர் முத்தமிழ்ச் சங்க செயலாளர் முகமது ஜியா, பள்ளி எஸ்எம்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!