July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இன்று நேயம் மக்கள் கழக தலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் அலுவலக செய்தி குறிப்பு…புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை அடிகள் சாலை…புதிய பேருந்து நிலையம், மற்றும் வியாபார நிறுவனங்களும்,தங்கும் விடுதிகளும் மேலும் சுற்றி உள்ள பகுதிகளானராஜா நகர்,அருந்ததி நகர்,முத்தமிழ் நகர், உருளையன்பேட்டை வார்டுசெங்குந்தர் வீதி, அம்மன் கோவில் வீதி,முல்லை நகர்,முல்லை நகர் விரிவு,செங்கேணி அம்மன் நகர்,சுப்பையா நகர்,மங்கலஷ் நகர்,கண்ணன் நகர்,சஞ்சய் காந்திநகர்,அய்யனார் நகர்,இளங்கோ நகர்,சாந்தி நகர்,சாரதி நகர்,ராஜீவ் காந்தி நகர்,இந்திரா காந்தி நகர்,கென்னடி நகர்,கோவிந்தசாலைமற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது…. என்ன காரணம் என்றுமின்துறை அதிகாரியிடம் கேட்டபோது… மரப்பாலம் துணை மின் நிலையம் மிகவும் பழமையானதாக உள்ள மேலும் மின்மாற்றிகள் மிகவும் பழுதடைந்து உள்ளது என்றும் தற்போது உள்ள மின் தேவைகளுக்கு ஈடு செய்ய முடியாத மின்மாற்றியாக உள்ளது…பழைய மின்மாற்றிகளை மாற்றி புதிய மின்மாற்றிகள் அமைத்தால் தான் இதற்கு தீர்வு என்று கூறப்பட்டது…இதனை அறிந்த உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் இதற்கு உடனடியாக தீர்வு காண மின் பற்றாக்குறையை போக்கும் விதமாக மரப்பாலும் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் மின் இணைப்புகளை மாற்றி…வெங்கடா நகர் துணை மின் நிலையத்திலிருந்துமேற்கண்ட பகுதிகளுக்கு மற்றும் உருளையன்பேட்டை தொகுதி முழுவதும் மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறுஉருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்நேயம் மக்கள் கழக தலைவருமானG.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள்…20.07.2026… இன்று மின்துறை தலைமை அலுவலகத்தில்மின்துறை தலைமை பொறியாளர் அவர்களை சந்தித்து இதுபற்றி ஆலோசனை நடத்தினார்… மேற்கண்ட எங்கள் கோரிக்கையை ஓரிரு மாதத்தில் நிறைவேற்ற படாத பட்சத்தில் நாங்கள் பொது மக்களை திரட்டி பல்வேறு கட்ட தொடர் போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என மின்துறை அதிகாரிகளை எச்சரித்தார்.நிகழ்வில்நேயம் மக்கள் கழக பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.