விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் செஞ்சிக்கோட்டை முத்தமிழ் மன்றம் சார்பில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்க்கும் நோக்கில் மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல், புதிய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு மற்றும் கவியரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் சிவநாதன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் செஞ்சி தமிழ் இனியன் முன்னிலை வகித்தார்.
ஜி.டி. பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மன்றத்தின் துணைச் செயலாளர் சிவனேசன் தொகுப்புரை வழங்கினார். தொடர்ந்து, மன்ற வளர்ச்சி குறித்து செயலாளர் கே. கருணாநிதி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். பின்னர், “தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்” என்ற தலைப்பில் கந்தசாமி முன்னிலையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிஞர்களும், மாணவர்களும் கவிதைகள் வாசித்தனர். சிறப்பாக கவிதை வாசித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக, முத்தமிழ் மன்றத்தின் பொருளாளர் தமிழன் சீனு நன்றியுரை வழங்கினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்