July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பாபு ஜகஜீவன்ராம் நினைவு நாள்: புதுச்சேரியில் அரசுசார் மலரஞ்சலி

புதுச்சேரி, ஜூலை 6: சமூக நீதிக்கான போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த அமரர் பாபு ஜகஜீவன்ராம் அவர்களின் நினைவு நாளையொட்டி, புதுச்சேரியில் இன்று அரசுசார் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ள தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பின்புற நுழைவுவாயிலுக்கு அருகிலுள்ள பாபு ஜகஜீவன்ராம் அவர்களின் திருவுருவச் சிலைச் சதுக்கத்தில் காலை 10 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி அரசின் அமைச்சர்கள் ராஜவேல் மற்றும் சிவகோவிந்து தலைமையேற்றனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வெ. வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநர் சுரேஷ் ராஜ், உதவி இயக்குநர் முனைவர் குலசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் திரளாக பங்கேற்று, பாபு ஜகஜீவன்ராம் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சி மரியாதையுடன் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.