July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி செஞ்சி, வல்லத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

செஞ்சி, ஜூலை 7:

2026 தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெற்றுள்ள அனைத்து வகை கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் வல்லம் மத்திய கூட்டுறவு வங்கிகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் பெற்ற கடன்கள், வேளாண் கடன், நகைக் கடன், பயிர் கடன், விவசாய நில அடமானக் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களையும், குறிப்பாக 2021 முதல் 2026 வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

செஞ்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை அலுவலகப் பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநிலப் பொறுப்பாளர் கோவிந்தன், ஆட்டுப்பட்டி ஏழுமலை, ஜெயச்சந்திரன், அவரியூர் தம்பிதுரை, கோனை ரவி, வழக்கறிஞர் கோபி, கோனை அறிவாழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வல்லத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன், ஒன்றிய பொருளாளர் குமாரசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ஹரிகரன், கண்ணன், முனுசாமி, சேது, கிருஷ்ணமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, மணிவேல், வசுந்தராஜ், சக்திவேல், ஸ்ரீதரன், தனசேகர், ராதாகிருஷ்ணன், பாண்டியன், சரவணன், தர்மராஜ், மணிபாலன், முத்து, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.