July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி 30-06-2026

புதுச்சேரி உப்பளம் தொகுதி ஆட்டுபட்டி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டனர்.

புதுச்சேரி உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் அவர்கள் தொகுதி மக்களின் கோரிக்கைகளை அறிந்து தொகுதி முழுவதும் அதிகாரிகளுடன் சென்று தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை குறித்தும், இலவச மனைப்பட்டா மற்றும் அப்பகுதியில் உள்ள 30 ஆயிரம் சதுர அடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது தொடர்பாக தற்காலிக சபாநாயகர் அன்பழகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தனர். இப்பகுதி மக்களுக்கு இலவசமாக மனைப்பட்டா வழங்குவது குறித்தும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவது குறித்தும் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் உறுதி அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தற்காலிக சபாநாயகர் அன்பழகன், ஆட்டுப்பட்டி பகுதியில் உள்ள கூரை வீடுகளை கல்வீடாக மாற்றுவதற்கு உள்ள சாத்தி கூறுகள் குறித்தும், கோவில் நிர்வாகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற்று அவர்களுக்கு கல்வீடு கட்ட நிதியுதவி பெற்று தருவது குறித்து மாவட்ட ஆட்சியரை அழைத்து வந்து ஆலோசனை நடத்தியதாகவும், அதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன குறித்தும் கலந்து பேசியதாக தெரிவித்தவர், இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.