July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பணிநிறைவு பெற்ற வட்டார கல்வி அலுவலர் கோ. குணசேகரனுக்கு பாராட்டு விழா

வந்தவாசி, ஜூன் 30:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தெள்ளார் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி பணிநிறைவு பெற்ற கோ. குணசேகரனுக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் டி.ஆர். நம்பெருமாள் தலைமை தாங்கி, கல்விப் பணியில் கோ. குணசேகரன் ஆற்றிய சேவைகளை பாராட்டிப் பேசினார். மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும் அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை என அவர் தெரிவித்தார்.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் தமிழ்ச் செல்வி, நல்நூலகர் தமீம், ஆசிரியர்கள் மா. ரவி, தா. பாரதி மற்றும் தன்னார்வலர் தங்கம் உள்ளிட்டோர் கோ. குணசேகரனுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் பேசிய கோ. குணசேகரன், தன்னுடன் இணைந்து பணியாற்றிய ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்து, கல்விப் பணியில் அனைவரும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பணிநிறைவு பெற்ற கல்வி அலுவலருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.